திருப்பதியில் பெண்ணுக்கு கரோனா தொற்று

திருப்பதி: ஆந்​தி​ரா​வில் விசாகப்​பட்​டினம், விஜய​வா​டா, குண்​டூர், கடப்​பா, நெல்​லூரில் கரோனா தொற்று பரவி வரு​கிறது. கடந்த ஒரு மாதத்​தில் 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்​பட்​டுள்​ளது. இதில் 4 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், தின​மும் பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் வந்து செல்​லும் திருப்​பதி நகரின் எஸ்​டிவி நகரை சேர்ந்த 65 வயது பெண்​மணிக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் தனி வார்​டில் சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது. மேலும் அவரது குடும்பத்தினருக்​கும் கரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்​பட்​டு உள்​ளது.

Source link