அடேய் திருட்டு பயலே… அர்ஜுனிடம் வம்பு இழுக்கும் சாமந்தி.. நடந்தது என்ன? – சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட்
சாமந்தி சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமந்தி அரசி வீட்டுக்குள் வேலைக்கு வந்த நிலையில் இன்று, சாமந்தி ராணியின் போட்டோவை வைத்துக் கொண்டு ஏமா எங்கள விட்டுப் போனீங்க என்று பீல் பண்ணி பேசுகிறாள். அதன் பிறகு தோட்டத்து பக்கம் செல்ல அங்கே மகேந்திரன் துளசி செடியை வைத்துக் கொண்டிருக்க சாமந்தி அவரை தோட்டக்காரர் என நினைத்து தோட்டக்காரரே எவ்வளவு நாளா இந்த வீட்டில வேலை பாக்குறீங்க? நானும் இந்த வீட்டில் புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கேன். இந்த அம்மாகிட்ட எப்படித்தான் வேலை பாக்குறீங்களோ என பேச மகேந்திரன் சாமந்தி பேசுவதை ரசித்தபடி கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து சாமந்தி ரூமை கிளீன் செய்ய அர்ஜுன் அறைக்குள் நுழைகிறாள். அங்கே அவளது போன் இருப்பதை பார்த்து இந்த வீட்ல யாரோ திருடன் இருக்காங்க என முடிவுக்கு வருகிறாள். இந்த சமயத்தில் அர்ஜுன் காரை சுத்தம் செய்து கொண்டிருக்க அவனை கார் டிரைவர் என நினைத்துக் கொள்கிறாள். அன்னைக்கு ஓனர் மாதிரி சீன் போட்டான் ஆனா கார் டிரைவர் போல என தப்பாக கணக்கு போடும் சாமந்தி கீழே இறங்கி வந்து திருட்டு பயலே என் திட்டுகிறாள். யாரைப் பார்த்து திருட்டு பையனு சொல்றீங்க என்று அர்ஜுன் கேட்க நீதான் என் செல்போனை திருடிட்டு வந்து இருக்க என்று சொல்கிறாள்.
நீங்கதான் என் வாட்சை திருடிட்டு போனீங்க என்று அர்ஜுன் சொல்ல சாமந்தி நானா என்று கேட்க ஆமா உங்க பையை கொண்டு வாங்க என்று சொல்கிறான். சாமந்தி தனது பையை கொண்டு வர அதில் அர்ஜுன் வாட்ச் இருக்க இது எப்படி வந்தது என குழப்பம் அடைகிறாள். பிறகு நான் உங்களை திருடன் என்று சொன்னதுக்கும் நீங்க என்னை திருடினு சொன்னதுக்கு கணக்கு சரியா போச்சு. நீங்களும் வேலைக்காரன் தான் நானும் வேலைக்காரி தான்.. நமக்குள்ள சண்டை வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்து ஜகா வாங்க அர்ஜுன் சாமந்தி நடந்து செல்வதையும் அவள் பேசியதையும் நினைத்து சந்தோஷப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அப்பத்தாவுக்கு காத்திருக்கும் நோஸ்கட். சிலம்பாட்டத்தில் ஜெயிக்கும் ஜீவா – வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
வாகை சூடவா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜீவா சிலம்ப போட்டியில் பங்கேற்ற நிலையில் இன்று ஜீவா எதிரணியிடம் சரமாரியாக அடி வாங்க நண்பர்கள் அவங்க எல்லாம் ரொம்ப பழக்கப்பட்டவங்க, உன்னால அவங்கள ஜெயிக்க முடியாது வேண்டாம் போயிடலாம் என்று சொல்ல பொண்டாட்டிக்காக சண்டை போடுற எவனும் தோக்க மாட்டான் என ஜீவா வசனம் பேசுகிறான்.
பிறகு இறங்கி அடிக்கும் ஜீவா போட்டியில் வெற்றி பெற்று ரெண்டு லட்சம் ரூபாய் பரிசு தொகையை வெல்கிறான். பாராட்டு விழாவில் பாராட்டு எல்லாம் வேண்டாம்.. முதலில் பணத்தை கொடுக்க என வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகை கடைக்கு கிளம்புகிறான். மறுபக்கம் அப்பத்தா மீனாட்சியிடம் அவன் சின்ன வயசுல இருந்து இதுவரைக்கும் ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமா இருந்தது கிடையாது. இப்பயும் எதுவும் செய்ய மாட்டான் கிளம்புங்க வீட்டுக்கு போகலாம் என சத்தம் போடுகிறார்.
மேலும் இவங்களுக்கு தான் தெரியாது சக்தி உனக்குமா நான் சொல்றது புரியல என அப்பத்தா வாக்குவாதம் செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜராஜன் மீது பழி போடும் பெண்.. கார்த்திக் உண்மையை நிரூபிக்க போவது எப்படி?
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஒரு பெண்மணி ராஜராஜனின் மீது தப்பான குற்றச்சாட்டுகளை வைத்து நிலையில் இன்று தப்பான குற்றச்சாட்டுகளை வைத்து பெண்மணி ராஜராஜனுக்கு தொடங்கும் மச்சம் இருக்கும் என்ற விஷயத்தையும் சொல்ல அதுவும் சரியாக பொருந்த அவர் பூஜையில் பங்கேற்க தகுதி இல்லாதவர்கள் நிர்வாகம் முடிவெடுக்கிறது. ஆனால் கார்த்திக் எனக்கு ஒரு நாள் கால அவகாசம் கொடுங்க நாளைக்குள்ள நான் உண்மையை நிரூபிக்கிறேன் நாளைக்கு முகூர்த்தம் இருக்கிறது என்று சொல்கிறார்.
சாமுண்டீஸ்வரியின் மகள்கள் அப்பா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க உங்க மேல எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு. இதிலிருந்து கண்டிப்பாக உங்களை காப்பாற்றி விடுவோம் என்று வாக்கு கொடுக்கின்றனர். சிவனாண்டிக்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லும் சந்திரகலா வீட்டுக்கு வந்து சாமுண்டீஸ்வரியிடமும் இந்த விஷயங்களை சொல்ல இதைக் கேட்டு சாமுண்டீஸ்வரி டென்ஷன் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
