சென்னை: திருமலை வெங்கடாஜலபதி கோவிலில், அக்டோபர் மாத அங்கப்பிரதட்சண சேவைக்கான முன்பதிவு, நாளை காலை 10:00 மணிக்கும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான பதிவு, மாலை 3:00 மணிக்கும் தொடங்குகிறது.
அக்டோபர் மாத 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன் பதிவு, வரும் 24-ம் தேதி காலை 10:00 மணிக்கு தொடங்குகிறது. அதே நாள் மாலை 3:00 மணிக்கு திருமலை, திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் தொடங்குகிறது என, தேவஸ் தானம் தெரிவித்துள்ளது.
