திருவள்ளூரில் அனுமதியின்றி தங்கியிருந்த 6 வங்கதேசத்தினர் கைது!

திருவள்ளூர்: வெள்ளவேடு அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில், மத்திய, மாநில அரசுகள் அனுமதியின்றி தங்கியிருந்த ஆறு வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வங்கதேசத்தினர் தங்கியிருப்பதாக, திருவள்ளூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார், குத்தம்பாக்கம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஊராட்சி காலி மைதானத்தில் குடிசை அமைத்து அனுமதியின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மது முன்னா, 27, சுல்தானா, 40, நர்கேஷ், 45, முகம்மது லைசேல், 30 மற்றும் இரு சிறுவர்களை கைது செய்தனர்.

அதன்பின், ஆறு பேரையும், சேலம் மாவட்டம் ஆத்துாரில் உள்ள வெளிநாட்டவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Source link