திரைப்படமாகும் தமிழ்நாட்டை உலுக்கிய விளாத்திகுளம் சம்பவம்

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த உண்மை சம்பவம் சினிமா படமாகிறது. இம்மானுவேல் அரசர் பிலிம்ஸ் சார்பில் சாமுவேல் சார்ஜ் தயாரிக்க, ‘யோகிடா’ படத்தை இயக்கிய கவுதம் கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். முன்னணி நடிகர் -நடிகைகள் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விளவங்கோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்திட திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஜூலை மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கவுதம் கிருஷ்ணா கூறுகையில், “உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்துக்காக மிகவும் ரிஸ்க் எடுத்திருக்கிறோம். இந்த படம் பல உண்மை கூற்றுகளை சுமந்து வருகிறது. படம் நிச்சயம் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்”, என்றார்.

Source link