துப்பில்லாத ஸ்டாலின் சார் – திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கை குறிப்பிட்டு தவெக ஐடி விங் விமர்சனம் – tvk it wing criticized mk stalin for citing corruption cases against former dmk ministers

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் கே. என். நேரு ஆகியோர் மீதான உழல் மற்றும் லஞ்சம் தொடர்பான வழக்குகள் இன்று நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை குறிப்பிட்டு, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டானினை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

துப்பில்லாத ஸ்டாலின் சார்

அந்த அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலினை, துப்பில்லாத ஸ்டாலின் சார் என குறிப்பிட்டு, ஆட்சியில் இருந்தபோது தூங்கினீர்களா? உங்கள் மந்திரிகள் இத்தனை ஊழல் வழக்கு வாங்கிக் கொண்டு இருக்கும்போது, வாய் மட்டும் ஏன் சார் இப்படி வங்காள விரிகுடா அளவுக்கு பேசுறீங்க? என கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நேரு மீதான வழக்கு

நகராட்சி துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் நேரு தாக்கல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் நேருவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அன்பில் மகேஷ் மனு தள்ளுபடி

தமிழகத்தில் கடந்த 2021- 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல், பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் டிடிசிபி (DTCP) போன்ற அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்யப்பட்டதில் முன்னாள் அமைச்சை அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து வழக்கு விசாரணையில் அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தாக்கள் செய்யத நிலையில், இன்று அவரது முன் ஜாமின்மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளளுபடு செய்து உத்திவிட்டது. இதனால் 100 கோடி லஞ்சம் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

திமுக – தவெக மோதல்

தவெக ஆட்சியில் நடைபெற்று வரும் குற்றங்கள், மக்கள் பிரச்சினைகள் என திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று இரண்டு முக்கிய முன்னாள் அமைச்சர்களின் மனு தள்ளபடி செய்யப்பட்ட நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து தவெக ஐடி விங் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Source link