அப்பா வழியில் மகன்: பிரபல நகைக் கடையின் அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராக ஜேசன் சஞ்சய் நியமனம்

ஆண்டிக், வைரம், டெம்பிள் ஜூவல்லரி, ஜடாவ் போல்கி மற்றும் பிளாட்டினம் நகைகளின் பிரம்மாண்டமானத் தொகுப்புகளுக்குப் பெயர் பெற்ற பிரபல நகை நிறுவனமான சல்லானி ஜூவல்லரி மார்ட் (Challani Jewellery Mart), தனது அதிகாரப்பூர்வ பிராண்ட் தூதராக ஜேசன் சஞ்சய்-யைஅறிவித்துள்ளது. சென்னை, மதுரை மற்றும் புதுச்சேரியில் தனது கிளைகளைக் கொண்டுள்ள சல்லானி நிறுவனம், இதன் மூலம் சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த இணைப்பின் ஒரு பகுதியாக, ஜேசன் சஞ்சய் சல்லானி ஜூவல்லரி மார்ட்டின் சமூக வலைதளப் பிரச்சாரங்கள் மற்றும் அனைத்து ஊடக விளம்பரங்களிலும் பிராண்டின் முகமாகச் செயல்படுவார். பிராண்டின் உயர்தரம், புதுமை, தரம் மற்றும் நம்பிக்கை ஆகிய முதன்மை மதிப்புகளைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், இளைய தலைமுறையினருடன் வலுவான தொடர்பை ஏற்படுத்துவதே இந்த கூட்டுப்பணியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கூட்டணி குறித்து பேசிய சல்லானி ஜூவல்லரி மார்ட்டின் நிர்வாக இயக்குநர் ஜெயந்திலால் சல்லானி,

“ஜேசன் சஞ்சய் புதிய தலைமுறையின் தன்னம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் பிரதிபலிக்கிறார். சல்லானி ஜூவல்லரி மார்ட் பயணிக்க விரும்பும் பாதையும் இதுதான். நாங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், குறுகிய காலத்தில் நாங்கள் எடுத்த மிக முக்கியமான முடிவுகளில் இதுவும் ஒன்று. பல ஆண்டுகளாக எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொண்டே, இளம் தலைமுறையினருடன் எங்களை இணைக்க ஜேசன் சஞ்சய்யின் இளமைப் பூர்வமான நம்பகத்தன்மையும், படைப்பாற்றல் தொலைநோக்குப் பார்வையும் பெரிதும் உதவும்” என்று தெரிவித்தார்.

பாரம்பரியப் பெருமையையும், நவீன காலப் பார்வையையும் ஒன்றிணைக்கும் சல்லானி ஜூவல்லரி மார்ட்டின் நோக்கத்தை இக்கூட்டணி உறுதிப்படுத்துகிறது. மாறும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் சல்லானியின் முயற்சியையும், அவர்களின் விதவிதமான நகை சேகரிப்புகளையும் ஜேசன் சஞ்சய்யின் வருகை புதுமையான பார்வையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராண்ட் தூதராக இணைந்தது குறித்து ஜேசன் சஞ்சய் பேசுகையில்,

“என்னைப் பொறுத்தவரை, அடையாளம் என்பது நாம் சொந்தமாக உருவாக்கிக் கொள்வதே தவிர, பரம்பரையாகப் பெறுவது அல்ல. சல்லானி பெருமைமிக்க பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும், தனக்கான சொந்தப் பாதையை உருவாக்குவதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. அந்தப் பொதுவான எண்ணமும் நோக்கமும்தான் நான் இங்கு இணைந்ததற்கான முக்கிய காரணம்” என்று கூறினார்.

இளம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி பேசிய சல்லானி ஜூவல்லரி மார்ட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி (CMO) மீனா சாப்ரியா,

“இன்றைய சூழலில் பிராண்ட் தூதர் யார் என்பதை விட, அவர்கள் எந்த அளவுக்கு மக்களுடன் தொடர்புடையவர்களாக (Relevant) இருக்கிறார்கள் என்பதே முக்கியம். ஜென் ஸி தலைமுறையினர் தங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் எளிதில் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். ஜேசன் சஞ்சய் சரியாக அந்த புத்துணர்ச்சியூட்டும் ஆற்றலை சல்லானிக்குக் கொண்டு வருகிறார்” எனக் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஜேசன் சஞ்சய்யின் தந்தையும், பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் ‘ஜோஸ் ஆலுக்காஸ்’ நகைக்கடை நிறுவனத்தின் பிராண்ட் தூதராகச் செயல்பட்டு அந்நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.

தற்போது அதே பாணியில், அவரது மகன் ஜேசன் சஞ்சய்யும் சல்லானி ஜூவல்லரி மார்ட் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக ஒப்பந்தமாகி விளம்பர உலகிற்குள் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்

Source link