தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை.. அவசர உதவி எண்களை அறிவித்த ஆட்சியர்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை பாதிப்பு குறித்த உதவிக்கு 1077, 70923 00044 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.