தேக்கம்பட்டி சிறையில் இருந்து விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பி ஓடிய 17 கைதிகளில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
தேனி மாவட்டம் தெக்கம்பட்டியில் உள்ள சிறையில் இருந்து தப்பி ஓடிய 17 விசாரணை கைதிகளில், 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் சிறைக்கு பின்னால் இருந்த புதர்களில் கண்டறியப்பட்டார். மூவர் சாலை வழியாக நடந்து சென்றபோது பிடிபட்டனர். மற்றொருவர் ஆட்டோ ரிக்ஷாவில் ஏற முயன்றபோது கைது செய்யப்பட்டார். மேலும் 8 பேர் தமிழ்நாடு தேனி நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டனர். அங்கு ட்ரோன்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இன்று (அக்டோபர் 27) மாலை நிலவரப்படி, சிறையிலிருந்து தப்பிய 17 விசாரணை கைதிகளில் 13 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். வலிப்பு நோய் வந்தது போல் நடித்த கைதிகள் பெரும்பாலானோருக்கு முதன்மை வாயில் வழியாக வெளியேறிய நிலையில், தற்போது பலரும் மீண்டும் கைது செய்யபப்பட்டுள்ளனர்.
இது குறித்து சிறைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் (DGP) சந்தீப் ராய் ரத்தோர், 13 பேர் பிடிபட்டுள்ளதை உறுதிசெய்ததுடன், எஞ்சிய நால்வரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று தலைமை காவலர்கள் உட்பட 9 சிறைத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (அக்டோபர் 26) இரவு, சிறை அறைக்குள் இருந்த ஒரு கைதிக்கு வலிப்பு நோய் வந்தது வந்துள்ளது. இதனை பயன்படுத்தி மற்ற கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். வலிப்பு வந்தவ கைதிக்கு மருத்துவ அவசர நிலைக்கு உதவுவதற்காக ஒரு காவலர் உள்ளே நுழைந்தபோது, கைதிகள் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அந்த காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டது, மேலும் 17 கைதிகள் முதன்மை நுழைவாயில் வழியாகத் தப்பிச் சென்றனர்.
கைதிகள் தப்பி ஓடிய இந்த சம்பவம் குறித்து மாநிலம் தழுவிய எச்சரிக்கைக்கு வழிவகுத்தது. தப்பிய கைதிகளை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல் துறையினர் வாகனங்களைச் சோதனையிட்டனர், சுற்றியுள்ள பகுதிகளைத் தேடினர், மேலும் கேரள எல்லையோர மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். இதில் முதல் கைது அதிகாலை வேளையில் நடந்தது.
பிரவீன் என்பவர் சிறைக்கு பின்னால் இருந்த புதர்களுக்கு இடையே கண்டறியப்பட்டார். அவர் சிறையின் எல்லையைக் கடந்திருந்தாலும், அதற்கு மேல் வெகுதூரம் செல்லவில்லை. தேனி தேவாரத்தைச் சேர்ந்த சிலம்பரசன், சிறையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிபட்டி அருகே சாலையில் நடந்து சென்றபோது பிடிபட்டார்.
மதுரை சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மதுரை மேலமடையைச் சேர்ந்த ராஜா சிக்கந்தர் ஆகியோர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்கரம்பட்டி என்ற கிராமத்துச் சாலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தனர். மதுரை அருகே உள்ள அளவந்தானைச் சேர்ந்த லிங்கபிரசாத், சிறையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரத்தில் ஆட்டோவில் ஏறும்போது பிடிபட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறியதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த ஐந்து பேரின் கைது சம்பவங்கள், இரவோடு இரவாக நடந்த தப்பியோட்டத்தின் அடுத்தகட்ட நிலையை வெளிப்படுத்தின. புதர்கள், கிராமத்துச் சாலைகள் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கைது சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் தப்பி சிறைக்கு வெளியே வருவது ஒரு பிரச்சனையாக இருந்தது. ஆனால் தப்பிச் செல்வதற்கு ஒரு இடத்தை கண்டுபிடிப்பது மற்றொரு பிரச்சனையாக இருந்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/10/27/jail-break-2-2026-10-27-19-56-39.webp)
மதியத்திற்குள், தேனிக்கு அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து காவல் துறையினருக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்தன. ட்ரோன்களின் உதவியுடன், 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்து 8 தப்பிய கைதிகள் கைது செய்யப்பட்டனர்.
20-களின் நடுப்பகுதியில் உள்ள இவர்கள் அனைவரும், சில நிமிடங்களுக்கு சிறையின் கூரைக்கு பதிலாக திறந்த வெளியைப் பார்த்தனர்; ஆனால் அங்கு காவலர்களின் ட்ரோன் பறந்து கொண்டிருந்தது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற இந்த நடவடிக்கையின் வான்வழிப் படம், பெரிய பாறைகளுக்கும் அடர்ந்த தாவரங்களுக்கும் இடையிலான ஒரு குறுகிய, கரடுமுரடான பாதையில் சிலர் தப்பிச் செல்ல முயல்வதைக் காட்டுகிறது.
மேலிருந்து பார்க்கும்போது, தரைப்பகுதி சிறிய அளவிலான பார்வைகளாகப் பிரிந்து காணப்படுகிறது. சிவப்பு நிற நிலத்தின் ஒரு பகுதி, ஒரு பாறைப் பரப்பு, தாவரங்களால் பகுதி மறைக்கப்பட்ட ஒரு நபர். மறைவிடத்தை வழங்கிய புதர்கள், தரை மட்டத்திலிருந்து அவர்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதையும் கடினமாக்கின.
காட்டுப் பகுதியில் கைது செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், பிடிபட்ட குழுவினர் தாழ்வான மரக்கிளைகளின் கீழ், மண் மற்றும் பாறை கரையின் பின்னணியில் நெருக்கமாக உட்கார்ந்திருப்பதைக் காட்டுகிறது. பலருக்கு சட்டை இல்லை; சிலர் தங்கள் துணிகளை உடலோடு பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். கரடுமுரடான தரையில் வெறும் கால்கள் ஓய்வெடுக்கின்றன.
செவ்வாய் கிழமை மாலையும் தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தனர், மேலும் கேரளாவின் எல்லை மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிறையில், ஒரு மருத்துவ அவசர நிலை எவ்வாறு இவ்வளவு பெரிய தப்பியோட்டமாக மாறியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/10/27/jail-break-3-2026-10-27-19-56-04.webp)
இந்தச் சம்பவம் 1995-ல் வேலூர் கோட்டைக்குள் இருந்த சிறப்பு முகாமில் இருந்து 153 அடி நீளச் சுரங்கம் வழியாக 43 எல்.டி.டி.இ சந்தேக நபர்கள் தப்பிய சம்பவத்தை நினைவூட்டியது. ஆனால் தெக்கம்பட்டியில் வெளியேறும் வழியாக இருந்தது முதன்மை வாயில் மட்டுமே. இந்த சிறை உடைப்பு அரசியல் ரீதியான விவாதங்களையும் உருவாக்கியது. பிரேக்கிங் பேட் (Breaking Bad) தொடருக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பிரிசன் பிரேக் (Prison Break) தொடங்கப் பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது புகழ்பெற்ற டிவி தொடர்களைக் குறிக்கிறது. திமுக ஆட்சியில் தான் குற்ற மற்றும் ஊழல் தொடர்களான நார்கோஸ் (Narcos), மணி ஹெய்ஸ்ட் (Money Heist) போன்றவற்றுக்கான தூண்டுதல் கிடைத்துள்ளது என்று த.வெ.க தகவல்தொழில்நுட்ப பிரிவு குற்றப் பின்னணி தொடர்களின் பட்டியலுடன் பதிலளித்தது.
