தேனிசைத் தென்றல் தேவாவுக்கு இரங்கல் பாடல் வெளியீடு; பிரபல கானா பாடகர் இன்பென்ட் உருக்கம்

தமிழ் திரையுலகில் தனித்துவமான இசையமைப்பு பாணியாலும், பல்வேறு வெற்றிப் பாடல்களாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தேனிசைத் தென்றல் தேவா. குறிப்பாக, கானா இசைக்கு திரையிசையில் முக்கியத்துவம் அளித்த இசையமைப்பாளர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார். வடசென்னைப் பகுதிகளில் பிரபலமான கானா இசையைத் திரைப்படங்களின் மூலம் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்ததில் தேவாவின் இசைக்கு முக்கியப் பங்கு உண்டு. 

1 கிலோ வெங்காய விற்பனைக்கு ரூ.2 ஊக்கத்தொகை; ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு

எளிய மக்களின் வாழ்வியல், இளைஞர்களின் உணர்வுகள், காதல், நட்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தும் அவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. தேவாவின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், கோவை புலியகுளத்தைச் சேர்ந்த கானா பாடகர் இன்பென்ட், தேவா மீதான தனது மரியாதையையும் இசைப் பங்களிப்பின் மீதான உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் இரங்கல் பாடல் பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். கானா இசையின் மீது ஆர்வம் கொண்ட பாடகர், தனக்கு பிடித்த இசைக் கலைஞருக்கு பாடல் மூலம் அஞ்சலி செலுத்தியிருப்பது இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Source link