தமிழக காவல்துறையில் பல்வேறு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் தேனி மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 5 அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவு வெளிவந்துள்ளது.
தமிழக அரசின் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் அவர்கள் டான்ஜெட்கோ டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவு, பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மாநில அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொறுப்பு. முதலமைச்சர் விஜய் மற்றும் மூத்த அமைச்சர்கள், செயலாளர்கள் ஆகியோர் தீவிர ஆலோசனைக்கு பிறகு அந்த இடத்தில் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களை நியமித்திருந்தனர். தற்போதைய மாற்றம் என்பது தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய பின்னணியில் நிகழ்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேலும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி பதவியில் இருந்து தேனி மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
Source link
