மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஞ்சய் மாத்தூர், சோனல் சந்திரா இட மாற்றம்: கரூர், தென்காசிக்கு புதிய எஸ்.பி-க்கள் –

தமிழக உள் துறை முதன்மைச் செயலாளர் அ. கார்த்திக் பிறப்பித்துள்ள உத்தரவில், “டி.ஜி.பி சஞ்சய் மதுர் ஐ.பி.எஸ் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், தற்போது மாநில குற்றப் பதிவுப் பணியகத்தின் தலைவராக/டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில குற்றப் பதிவுப் பணியக ஐ.ஜி-யாக இருந்த சோனல் சந்திரா ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலக தலைமையக ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தாம்பரம் மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை துணை ஆணையராக இருந்த பி. ரகுபதி ஐ.பி.எஸ், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு (வடக்கு மண்டல) எஸ்.பி-யாக இருந்த டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐ.பி.எஸ், தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட எஸ்.பி-யாக இருந்த எஸ். அசோக் குமார் ஐ.பி.எஸ், மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link