புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து முக்கிய ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் தேர்வு முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. நீட் வினாத்தாள் கசிவை தடுக்க, சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரித்து 3 மாதங்களுக்குள் தண்டனை, குற்றவாளிகளுக்கு ரூ.10 கோடி அபராதம், குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்வு முறைகேடுகளை தடுக்க சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்டம், 2024-இல் திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஏற்கனவே பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
