பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி நந்தனத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழக வெற்றி கழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
வரும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பயணத்தை அவர் தவிர்த்து உள்ளார்.இது தவெகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை
தமிழக அரசியல் களத்தில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசியல் வட்டாரத்தில் முக்குலத்தோர் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. குறிப்பாக,1979-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தான் பசும்பொன்னுக்கு சென்று வழிப்படும் வழக்கத்தை ஆரம்பித்தார். தமிழக சட்டப்பேரவையில் முத்துராமலிங்க தேவரின் முழு உருவப் படத்தையும் திறந்து வைத்தார். அதன்பிறகு 2007-ல் திமுக தலைவர் கருணாநிதி பசும்பொன்னுக்கு நேரில் சென்று வந்தார்.
அதிமுக கோட்டையாக பார்க்கப்பட்ட தென் மண்டலங்கள்
இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா 13 கிலோ தங்க கவசத்தை வழங்கியது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. மேலும் 2016 சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்று ஆட்சி அமைத்தார். தொடர்ந்து அதிமுகவில் முக்குலத்தோர் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.பிறகு தென் மண்டலங்கள் அதிமுக கோட்டையாக பார்க்கப்பட்டது.
மூலம் முக்குலத்தோர் வாக்கு வங்கி
இதனைத் தொடர்ந்து,மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி,ராமநாதபுரம்,சிவகங்கை மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திமுக தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்க தொடர் மாநாடுகளை நலத்திட்டங்களை வழங்குவதை எல்லாம் இங்கிருந்தான் ஆரம்பித்தது. கருணாநிதி ,ஜெயலலிதாவை தொடர்ந்து,தமிழக முதல்வர்களாக இருந்த ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பசும்பொன்னுக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதன் மூலம் முக்குலத்தோர் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கணக்கு போட்டனர். மேலும் தென் மாவட்டங்களை நோக்கியே அரசியல் நகர்வுகள் இருந்தது.
பசும்பொன் பயணத்தைத் தவிர்க்கும் விஜய்?
ஆனால்,கட்சித் தொடங்கி 2 ஆண்டுகளிலேயே ஆட்சி அமைத்து முதல்வராக இருக்கும் விஜய், வரலாற்றிலேயே முதல்முறையாக பசும்பொன் போவதை தவிர்க்கும் ஒரே முதல்வர் விஜய் தான் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஏற்கெனவே கருணாநிதி ,ஜெயலலிதா உள்ளிட்டோர் உடல்நிலை காரணம் காட்டி பசும்பொன்னுக்கு செல்வதை வந்தனர். மேலும் பாதுக்காப்பு காரணங்கள் இந்த பயணத்தை விஜய் தவிர்க்கப்பட்டதாக அரசியல்வட்டாரத்தில் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலில், பெரிதாக விஜய் தென் மாவட்டங்களில் பிராச்சாரம் செய்யவில்லை. அனுமதி வழங்கப்பட்டவில்லை என்று ஓருபுறம் கூறப்படுகிறது. குறிப்பாக விஜய்க்கு நகர்புறங்களில் இருக்கும் செல்வாக்கு கிராமபுறங்களில் இல்லை என்று கூறப்படுகிறது.
தவெகவுக்கு பின்னடைவா?
தென் மாவட்டங்களில் அதிக அளவில் கிராம பகுதிகளாக இருப்பதால் தவெக பலத்தை கொண்டு சேர்க்கும் கட்டாயத்தில் உள்ளார் விஜய். இந்த நிலையில்,அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.தவெக பொறுத்தவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், கவுன்சிலர்கள் இல்லை என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ததாக பார்க்கப்படுகிறது. பசும்பொன்னை தவிர்ப்பதால் இந்த வாய்ப்பை தவெக இழக்க நெரிடுமே தவிர வாக்குவங்கி சரியவாய்ப்பில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய் உத்தரவால் தவெகவின் அமைச்சர்கள் குழு சென்று அஞ்சலி செலுத்த வாய்ப்பு இருக்கிறது. தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதலும், எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோருக்கு சரியான மரியாதை கொடுக்கப்படதால், அந்த சமூகத்தினர் அதிருப்தியில் இருக்கின்றனர். விஜய் தவிர்க்கும் இந்த வாய்ப்பை மு.க.ஸ்டாலின் சரியாக பயன்படுத்தினால், தென் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் மக்களை தன்வசப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் வாக்குசதவீதம் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது அரசியல் களத்தில் முதல்வர் விஜய் தவிர்த்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
