தேனிசை தென்றல் தேவா கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென மரமடைந்தது அவரது குடும்பம் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமா வட்டாரத்தில் பேரிழப்பாக அமைந்த நிலையில், இன்று (சபேஷ்) அவரது தம்பி மகன் கார்த்திக் சபேஷ் மரணம் தேவா குடும்பத்தை தீரா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கானா பாடல்களின் அடையாளமாக திகழ்ந்தவர் தான் தேவா. தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்பட்ட தேவா, பல முன்னணி நடிகர்கள் குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மட்டும் இல்லாமல், இன்று தமிழக முதல்வராக இருக்கும் விஜயின் ஆரம்பகட்ட படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து அவரை ஒரு பாடராகவும் அறிமுகம் செய்தவர் தேவா. தனது தம்பி மற்றும் தம்பி மகன்கள் என கடைசி வரை கூட்டுக்குடும்பமாக தமிழ் சினிமாவுக்கு இசையுடன் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியவர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 17-ந் தேதி இசையமைப்பாளர் தேவா திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பேரிழப்பாக அமைந்தது. இந்த துயத்தில் இருந்து தேவா குடும்பம் மீள்வதற்குள் அடுத்த துயராமாக 37 வயதான மறைந்த இசையமைப்பாளரும் தேவாவின் தம்பியுமான சபேஷின் மகன் கார்த்திக் இன்று (அக்டோபர் 20) மரணமடைந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் துணை நடிகராக சில படங்களில் கார்த்திக் வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100, உதயம் என்.ஹெச்.4, காதல் சொல்ல வந்தேன், மகாபலிபுரம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக் சபேஷின் மறைவு தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். மேலும், நடிகர் கார்த்திக் சபேஷின் உடல் திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சபேஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதியன்று கார்த்திக் தந்தையான இசையமைப்பாளர் சபேஷ் மரணமடைந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அவரது அண்ணன் தேவா, அக்டோபர் 20-ந் தேதி அவரது மகன் கார்த்திக் என தேவா குடும்பத்தில் அடுத்தடுத்து துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறிப்பாக தேவா இறந்த 2 நாள்களிலேயே, அவரது தம்பி மகனான நடிகர் கார்த்திக் சபேஷ் உயிரிழந்துள்ளது, அவரது குடும்பத்தினர் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
