சென்னை: சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. கடந்த திங்கள் கிழமை (அக்டோபர் 19) தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய அதிகரித்து 13,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் (அக்டோபர் 20) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 920 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 490 ரூபாய்க்கும் விற்பனைஆனது. வெள்ளி விலை ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரம்
நேற்று (அக் 21) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 230 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
இன்றைய நிலவரம்
இன்று (அக்டோபர் 22) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 235 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 225 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
