தொடர் கனமழை எதிரொலி; இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்த சூழலில்,  தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 1 வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே நேற்று (23-10-26) தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (24-10-26) ஆரஞ்ச் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 5 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 5 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.