இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்ற காரணத்தால் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் எதிரொலித்து வருகிறது.
கடந்த 12-ம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தக்து. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,600-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,21,744-க்கு விற்பனை ஆகிறது.
