த்த்தூனு துப்பிய முனியம்மா:நீங்க 18 பேரும் வெளியே போங்க, ஏழரைய கூட்டிய முனி

முனியம்மா அட்ராசிட்டி: பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் எப்படி வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஏதாவது பேசிக் கொண்டே இருந்தாரோ அதே போன்று இந்த சீசனில் நடந்து கொள்கிறார் காமன்மேன் ஷோவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முனியம்மா. தான் கத்தி கத்தி பேசி, சண்டை போட்டு கன்டன்ட் கொடுத்துக் கொண்டே இருந்தால் வெற்றி நமதே என நினைக்கிறார் போன்று. ஆனால் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது நாளில் இருந்து பார்வையாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் திட்டிக் கொண்டிருக்கும் போட்டியாளராக முனியம்மா மாறிவிட்டார்.

சில சமயங்களில் அவர் கொடுக்கும் கவுண்ட்டர்கள் ரசிக்கும்படி உள்ளது. ஆனால் அதற்காக எல்லாம் இந்த முனியை 105 நாட்கள் சகித்துக் கொள்ள முடியாது பிக் பாஸ் என பார்வையாளர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பிக் பாஸின் கண்கள் அந்த வீட்டின் மீது மட்டும் அல்ல சமூக வலைதளங்கள் மீதும் உள்ளது. போட்டியாளர்கள் மட்டும் அல்ல பார்வையாளர்களும் பிக் பாஸிடம் இருந்து தப்பவே முடியாது என்பதை முதல் சீசனிலேயே தெரிந்து கொண்டுவிட்டோம்.

முனி அட்டகாசம்: இந்நிலையில் சமூக வலைதளங்களில் முனியம்மா அதிகம் விளாசப்படுவதை பார்த்த பிக் பாஸோ அப்படியா சங்கதி என்று ப்ரொமோ வீடியோக்களில் அக்கா இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட முதல் ப்ரொமோ வீடியோவில் கன்டன்ட்டே முனியம்மா தான்.

பிக் பாஸ் 10 துவங்கி மூன்று நாட்களாகவிட்டது. ஆனால் இதுவரை யாரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை பற்றி பேசவே இல்லையே. பஞ்சாயத்து எதுவும் கூடவில்லையே என மக்கள் எந்த நேரத்தில் நினைத்தார்களோ பஞ்சாயத்தானதுடன், மக்கள் செல்வனை கேள்வி கேட்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

மிஸ்டர் விஜய் சேதுபதி : லன்ச்சுக்கு புளியோதரை பண்ணலாம் என ஐடியா கொடுத்தற்கு முனியம்மா சும்மா இல்லாமல் த்தூனு துப்பிவிட்டார். இந்தா முனி இந்த சவுடால் விடுவது, துப்புறது, நக்கலா பேசுவது எல்லாம் உன் வீட்ல வச்சுக்கோனு அக்காவுக்கு நாலு டோஸ்விட்டு ஓரமாக உட்கார வைத்தாலும் சரி, இல்லை நீ ஆடுனது போதும் தாயேனு பத்திவிட்டாலும் சரி. ஆனால் இந்த முனியம்மா ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும். பண்ணுவீங்களா, மாட்டீங்களா விஜய் சேதுபதி என அவரிடம் பஞ்சாயத்திற்கு சென்றுவிட்டார்கள் பார்வையாளர்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் சாய் பல்லவி உடன் சேர்ந்து இஞ்சி வெல்லம் எனும் காதல் கதையில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. ரொமான்ஸ் மூடில் இருக்கும் அவரிடம் போய் சண்டை காட்சியை தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். அது சரி இந்த சீசனுக்கு ரூ. 80 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதால்துப்புவது, திட்டுவது, தள்ளுவது என எந்த பஞ்சாயத்தாக இருந்தாலும் கவனிக்க வேண்டிய கடமை மக்கள் செல்வனுக்கு இருக்கிறதே.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இந்த வார நாமினேஷன் பட்டியலில் முனியம்மா பெயரை சேர்த்திருக்கிறார் சாதிகா. அதனால் அவரை வெளியேற்றிவிடுவார்கள் என்று பார்வையாளர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதற்கிடையே தனக்கு ஒரு நல்லது நடக்காதா என வந்த பாண்டியோ உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேறு வழியில்லாமல் கிளம்பிவிட்டார். அவருக்கு பதிலாக காமன்மேன் போட்டியாளர் மணிவண்ணன் வர வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.அதே சமயம் விமர்சகர் பிரசாந்த்தை அழைத்து வருமாறு பலரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Source link