தமிழகத்தில் தற்போது சுமார் 4,000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்குத் தினந்தோறும் ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலங்களில் விற்பனை இருமடங்காக அதிகரிக்கும். இதனிடையே டாஸ்மாக்கில் பாட்டில் ஒன்றுக்கு சுமார் 30 ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
சிவகாசியில் மீண்டும் சோகம்… பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள த.வெ.க அரசு, மதுபான கடைகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் பணம் வாங்குவதை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்தது. அதாவது, டாஸ்மாக் பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலித்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
டாஸ்மாக் பார் டெண்டர் புது அரசாணை
டாஸ்மாக் கடைகளையொட்டி மது கூடங்கள் நடத்த ஆன்லைன் மூலம் டெண்டர் விடும் போது இடத்தின் உரிமையாளர் தடையில்லா சான்று தேவை என்ற விதி காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மது கூடம் நடத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த த.வெ.க அரசு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணை மூலம் இனிமேல் மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் மதுபான கூடம் அமைக்க முடியும்.
மேலும் 15 சதுர மீட்டர் குறைந்த பட்ச அளவு என்பது 20 சதுர மீட்டர் என்று மாற்றப்பட்டது. அதாவது மது கூடம் குறைந்த பட்ச அளவு 205 சதுர அடிகளாக இருக்க வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் டாஸ்மாக் பார் டெண்டரில் அனைவரும் பங்கேற்கும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
