மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, திருக்கடையூரைச் சேர்ந்தவர் அரபக் முகமது அப்துல்லா, 48, என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, இந்த கடைக்கு வந்த, மூன்று பெண்கள் தங்க காசு கேட்டனர்.
கடை ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய மூன்று பெண்களும், தங்க காசை பதுக்கி வைத்துக்கொண்டு பித்தளை காசை மாற்றி வைக்க முயன்றுள்ளனர். இதை பார்த்த கடை உரிமையாளர் அவர்களை பிடித்து, பொறையார் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த விஜயசாந்தி, 22, லட்சுமி, 19, குமாரி, 45, என்பது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பெண்களையும் கைது செய்தனர்.
