தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழக முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னையிலிருந்து பிரிட்டன் புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் அடங்கிய இந்தக் குழுவும் சென்றுள்ளனர்.
முதல்வர் விஜய் லண்டன் பயணம்
இந்த நிலையில்,அரசு சார்ந்த வெளிநாட்டுப் பயணங்களின் போது நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள தலைவர்கள் தனிச் சிறப்பு விமானங்களைப் பயன்படுத்துவதே வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, தமிழக முதல்வர் விஜய் தனி விமானத்தைத் தவிர்த்துவிட்டுப் பொதுமக்களுடன் சாதாரண பயணிகள் விமானத்தில் பிரிட்டன் பயணம் மேற்கொண்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணம் செப்டம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்து, அவர் சென்னை திரும்புவார் எனப் பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி தெரிவித்துள்ளது.
லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்
இதற்கிடையே இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, பிரிட்டனில் இன்று (செப்டம்பர் 12) நடைபெறும் புகழ்பெற்ற ‘லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன்’ கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் நடிகரும் பிரபல கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்கிறார் என்பதைப் பந்தய அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ,தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் விஜய் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, உலகின் அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காகப் புகழ்பெற்ற ‘ சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் ’ தளத்தையும் அவர் பார்வையிட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் விஜய் – அஜித் சந்திப்பு
திரையுலகில் விஜய்யும் அஜித்தும் நீண்டகாலமாக ஆரோக்கியமான போட்டியாளர்களாகப் பார்க்கப்பட்டு வந்தாலும், இருவருக்கும் இடையே என்றும் மாறாத தனிப்பட்ட நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், லண்டனில் நடைபெறும் கார் பந்தய நிகழ்வின் போது அஜித்தைச் சந்தித்து முதல்வர் விஜய் உரையாடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி இரு தரப்பு ரசிகர்களிடையேயும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் விவரிக்க முடியாத உற்சாகத்தையும் அலைமோதச் செய்துள்ளது.
1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கும்
மற்றொருபுறம், தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கைத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்டப் பொருளாதார இலக்கை அடையும் நோக்கில், உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகத்தை நோக்கி ஈர்ப்பதில் மாநில அரசு தற்பொழுது தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
Source link
