நண்பருக்கு கெட்ட பேர் வரும்னா நான் கூடப் போக மாட்டேன்: CM விஜய், த்ரிஷா பற்றி அம்பிகா – actress ambika shares her opinion about vijay, trisha friendship

லண்டனில் முதல்வர் விஜய்யுடன் த்ரிஷாவை பார்த்த தளபதியன்ஸ் கோபம் அடைந்தார்கள். இந்நிலையில் முதல்வர், த்ரிஷா இடையேயான நட்பு பற்றி தன் கருத்தை தெரிவித்துள்ளார் அம்பிகா.

நண்பருக்கு நெகட்டிவ் பெயர் வருகிறது என்றால் நான் அவருடன் வெளியே செல்ல மாட்டேன் என விஜய், த்ரிஷா நட்பு குறித்து அம்பிகா தெரிவித்ததை தளபதி ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

விஜய், த்ரிஷா

முதல்வர் ஜோசப் விஜய் நடிகராக இருந்தபோது அவருடன் சேர்ந்து நடித்தவர் த்ரிஷா கிருஷ்ணன். பல வருடங்களாக நட்பாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் செல்லும் இடங்களுக்கு எல்லாம் த்ரிஷா ஏன் வருகிறார் என தளபதி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். என்ன தான் நட்பாக இருந்தாலும், அண்ணன்-தங்கை பாசமாக இருந்தாலும் இது சரியல்ல என்கிறார்கள். இந்நிலையில் விஜய், த்ரிஷா கிருஷ்ணன் நட்பு குறித்து பேசியிருக்கிறார் நடிகை அம்பிகா.

நட்பு நட்பு தான்

பேட்டி ஒன்றில் அம்பிகா கூறியதாவது, முதல்வராக விஜய் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதற்கு அவருக்கு ஹாட்ஸ் ஆஃப். சினிமாவில் நிறைய நல்ல க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள். இரண்டு பேர் நண்பர்களாக இருக்கும்போது அதில் ஒருவர் வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார் என்பதற்காக நட்பை துண்டித்துக்கொள்ள முடியுமா?. அந்த நட்பு தொடரத் தான் செய்யும். நட்புக்கு வேறு சாயம் பூசக் கூடாது. லண்டனுக்கு சென்றது பற்றி பேசினாங்க. த்ரிஷா தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக லண்டனுக்கு சென்றதாக சொல்கிறார்கள். அந்த படத்தில் ராதிகா கூட நடிக்கிறார் என்றார்.

அம்பிகாவின் கருத்து

த்ரிஷா எங்கு உட்கார்ந்து சாப்பிட்டால் எனக்கு என்ன வந்தது?. எனக்கும், ஒரு நபருக்கும் நட்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அவர் ஒரு பொசிஷனில் இருக்கிறார் என வச்சுக்கலாம். சில இடங்களுக்கு அவருடன் நாம் சென்றால் என் நண்பருக்கு தேவையில்லாமல் நெகட்டிவ் ஃபீட்பேக் வரும் என எனக்கு தோன்றினால், அந்த நட்பை நிஜமாகவே மதிக்கும் ஆளாக இருந்தால் நான் போக மாட்டேன் என்றார் அம்பிகா. அவர் பேசியது தான் சரி. எங்கள் உணர்வுகளை ஏற்று இனியாவது திருந்த வேண்டும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

மக்கள் உணர்வு

அம்பிகா மேலும் கூறியதாவது, நீங்கள் ஒன்றாக டிரஸ் செய்து ஒரே கலர் உடையில் சென்றதை பற்றி பேசுகிறீர்களா இல்லை லண்டன் சென்றதை பற்றி பேசுகிறீர்களானு கேட்டால், அந்த இடத்தில் நான் இருந்தால் என்னால் நண்பருக்கு நெகட்டிவ் பெயர் வரும் என்றால் நான் அவாய்ட் செய்வேன். மக்களுக்கு வருத்தம் ஏற்படுகிறது. நீங்கள் நண்பர்கள் என்கிறீர்கள் சரி. எப்பொழுது பார்த்தாலும் உங்களுக்காக நாங்கள் போராட வேண்டியிருக்கிறது. அந்த நட்புக்கு மதிப்பு கொடுத்து ஜாக்கிரதையாக இருக்கணும். மக்கள் இதை பார்த்து ஃபீல் செய்கிறார்கள். குடும்ப பிரச்சனை இல்லாமல் இருப்பவர்கள் குறைவானவர்கள். மக்களின் உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும் என்றார்.

சூப்பர் ஸ்டார்
அஜித் கார் பந்தயம்

த்ரிஷா கிருஷ்ணன் தன் பட ஷூட்டிங்கிற்காக லண்டனில் தங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் நண்பர் அஜித் குமார் ரேஸிங் அணி கார் பந்தயத்தில் கலந்து கொண்டதை பார்க்க சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டிற்கு சென்றார். வேலை காரணமாக லண்டன் சென்ற விஜய் தன் நண்பர் அஜித் குமாரின் அழைப்பை ஏற்று ரேஸ் பார்க்க சென்றார். அந்த இடத்தில் விஜய்யும், த்ரிஷாவும் அருகருகே நின்று கார் பந்தயத்தை பார்த்த வீடியோ வெளியாகவே, தளபதி ரசிகர்கள் அதிருப்தி அடைந்தார்கள்.

Source link