நம்ம ஊருல வீடு வாங்குற காசுல; இந்த நாட்டுல அரண்மனையே வாங்கலாம்… ஆனா ஒரு சிக்கல் இருக்கு

இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள ‘கிராண்ட் கெனால்’ (Grand Canal) நதிக்கரையில் அமைந்துள்ள மிகப்பிரபலமான மற்றும் பழமையான அரண்மனைதான் ‘பலாசோ டாரியோ’ (Palazzo Dario) அல்லது ‘கா டாரியோ’ (Ca’Dario). வெனிசியன் கோதிக் மற்றும் மறுமலர்ச்சி  கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை, தற்போது 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு  விற்பனைக்கு வந்துள்ளது.

365 நாளும் பளபளக்கும் தொப்பை… இந்த போலீஸின் வயிற்றை தடவினால்; அதிர்ஷ்டம் கூரைய பிச்சிட்டு கொட்டும்

மோனேவை கவர்ந்த கலைப்படைப்பு

11,356 சதுர அடி பரப்பளவில் அமைந்த இந்த அரண்மனையில் 9 பிரம்மாண்ட படுக்கையறைகள் மற்றும் அழகிய நதிப் பார்வைகள் (Venetian Views) உள்ளன புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியரான ஆஸ்கார்- க்ளாட் மோனே, இந்த அரண்மனையின் தனித்துவமான சமச்சீரற்ற வடிவமைப்பு மற்றும் சாய்ந்த புகைபோக்கிகளால் ஈர்க்கப்பட்டு, இதன் அழகை 4 முறை ஓவியமாக வரைந்துள்ளார்.

வரலாற்று மாற்றம்

19-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு பிரபுவான கௌண்டஸ் டி லா பாம்-ப்ளூவினெல் என்பவரால் இதன் படிக்கட்டுகள், பளிங்கு வேலைப்பாடுகள் மற்றும் சாப்பாட்டு அறைகள் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன.

சாபக்கேடான அரண்மனை

இந்த அரண்மனை எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அவ்வளவு பயங்கரமான ஒரு சாபத்தையும் தனக்குள்ளே கொண்டுள்ளது. வெனிஸ் நகர மக்கள் இதை “சாபக்கேடான அரண்மனை” என்றே அழைக்கிறார்கள். இதுவரை இந்த அரண்மனையைச் சொந்தமாக வைத்திருந்த உரிமையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் என குறைந்தது 7 பேர் அடுத்தடுத்து விசித்திரமான முறையிலும், கொடூரமான தாக்குதல்களினாலும் உயிரிழந்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையை 20 மில்லியனுக்கு வாங்குவது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகக் கருதப்பட்டாலும், இதன் பயங்கரமான வரலாற்றுப் பின்னணி வாங்குபவர்களை யோசிக்க வைக்கிறது. பழங்கால கலை நயமும், மர்மமான மரணங்களும் நிறைந்த இந்த ‘கா டாரியோ’ அரண்மனை, கோடீஸ்வரர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஒரே நேரத்தில் வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தி வருகிறது.

Source link