தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளாக இசையில் பலரையும் மகிழ்வித்த பாடகி எஸ்.ஜானகி, சமீபத்தில் மரணமடைந்த நிகழ்வு இந்திய திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதே சமயம் அவரது நினைவுகளை போற்றும் வகையில், நெட்டிசன்கள் பலரும் அவரது பழைய வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர், அந்த வகையில், தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவர் எஸ்.ஜானகி. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 17 மொழிகளில் 40,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 6 வயது குழந்தை முதல் 60 வயது கிழவன் என தனது குரலில் வித்தியாசம் காட்டி பாடும் திறமை கொண்டவர். ‘கண்ணா நீ எங்கே, வா வா நீ இங்கே’ என்ற பாடலில் 2 வயது குழந்தை போலவும், ‘காதலின் தீபம் ஒன்று’ பாடலில் இளம்பெண் குரல் போன்றும் பாடல்களை பாடியுள்ளார்.
எம்.எஸ்.வி இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பல முன்னணி நடிககைகளுக்கு தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். 4 தேசிய விருதை வென்றுள்ள ஜானகி, தமிழக அரசு கலைமாமணி விருது மட்டுமல்லாமல், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல மறக்க முடியாத பாடல்களை கொடுத்துள்ள எஸ்.ஜானகி, தேவர்மகன் படத்தில் இஞ்சி இடுப்பழகி என்ற பாடலை பாடியிருப்பார். இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க மீனா தேர்வு செய்யப்பட்டு சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில், அதன்பிறகு அவர் செட் ஆகவில்லை என்று கூறி ரேவதியை நாயகியாக நடிக்க வைத்துள்ளனர். அதே சமயம், இஞ்சி இடுப்பழகி பாடலை பாடும்போது, நீங்களே இந்த படத்தில் நாயகியாக நடித்துவிடுங்கள் என்று கமல் கூறியுள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனுடன் பேசிய எஸ்.ஜானகி, நாங்கள் இருவரும் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளோம். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நினைவோ ஒரு பறவை தொடங்கி, பல ஹிட் பாடல்களை பாடியுள்ளோம். அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி பாடும்போது, நீங்கள் நல்லா நளினத்தோடு பாடுறீங்க பேசாமா நீங்களே ஹீாரோயினா நடிச்சிடுங்க என்று கமல் சொன்னார். அதற்கு நான் எதாவது பாட்டி வேஷம் இருந்த கொடுப்பா நடிக்கிறேன் என்று சொன்னேன் என ஜானகி கூறியுள்ளார்.
