தவெக தலைவர் விஜய் முதல்வரான பிறகு பல்வேறு திரை பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், சமந்தா, விஜய் ஆண்டனி, பிரபு, விக்ரம் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் சந்தித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் ஜெய் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படஙக்ளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அவர், “நல்ல விஷயங்களுக்குக் காலம் தேவைப்படும்… சிறந்த விஷயங்கள் தமக்கான காலத்தைத் தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு செடியை பரிசாக அளித்துள்ளார். இவர் விஜய் நடித்த பகவதி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதில் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார். அதன் பிறகு அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
