நள்ளிரவில் பக்தர்கள் மீது ஏறிய லாரி; 15 பேர் பலி… நவராத்திரி விழாவில் சோகம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ளது புகழ்பெற்ற சீத்லா மாதா கோயில். நேற்று நவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காக திரண்டிருந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் சினோர் பகுதியிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி செங்குத்தான சரிவுப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்தது. கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த அப்பாதையில் வைக்கப்பட்டிருந்த காவல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த லாரி, சாலையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது பாய்ந்து, கோயிலின் நுழைவு வாயில் மற்றும் மதிலில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து

இவ்விபத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்தவுடன் 39 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் 15 பேர் உயிரிழந்ததாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். மேலும் 5 முதல் 6 பேர் கடுமையான எலும்பு முறிவுகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குவாலியர் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) தர்மவீர் சிங், “நவராத்திரியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த காவல் சோதனைச் சாவடியையும் தடுப்புகளையும் மீறி லாரி எவ்வாறு உள்ளே நுழைந்தது என்பது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், லாரியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை ஆய்வு செய்ய வட்டாரப் போக்குவரத்து (RTO) சிறப்புக் குழு அனுப்பப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்குச் சீரான சிகிச்சை வழங்க எக்ஸ்-ரே மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link