”நவம்பர் 1 முதல் பால் விலை உயர்வு”; அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

பால் உற்பத்தி செலவுகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசுக்கு நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.  

இது சம்பந்தமாகப் பால் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் கர்நாடகா முதல்வர் சிவகுமாரை சந்தித்து லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் ரூ.8 உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

இந்த கொள்முதல் விலை உயர்வு வருகின்ற நவம்பர் 1 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த பால் கொள்முதல் விலையுயர்வு மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது. உயர்த்தி வழங்கப்பட்டுள்ள இந்த 8 ரூபாயில், 7 ரூபாய் பால் உற்பத்தியாளர்களுக்கும், 1 ரூபாய் பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் கிடைக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.   

முன்னதாக, பால் ஒரு லிட்டர் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதோடு ஊக்கத்தொகை ரூ.5 வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொள்முதல் விலையில், ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், ஊக்கத்தொகையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.