நவம்பர் 2 வரை ஜாமின் கிடையாது; திமுக மாஜி அமைச்சர் மகேஷ் மனு ஒத்திவைப்பு

– நமது நிருபர் –

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக, முதலில் தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார், 58, கைது செய்யப்பட்டார். பின், அவரது கூட்டாளிகள் இருவர் கைதாகினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டது, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார், 48, மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகேஷ், 48, என்பதும் தெரியவந்தது.

இவர்களில், மகேஷ் இரு தினங்களுக்கு முன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் சரண் அடைந்துள்ளார். சிறையில் உள்ள மகேஷ் ஜாமின் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நவம்பர் 2ம் தேதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

Source link