சென்னை: நவம்பர் 3ஆம் தேதி முதல்வர் விஜய் ஈரோடு மாவட்டம் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் நடக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் பயணிக்கும் விஜய், கோவையில் இருந்து ஈரோட்டிற்கு சாலை மார்க்கமாக செல்ல உள்ளதாக தெரிய வந்துள்ளது.
