நாகாலாந்தில் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு

மோன்: நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்த மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மோன் நகரம், திஜ்தித் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், அசாம் ரைபிள்ஸ், போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link