நமது நிருபர்
இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழக அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளைக் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர்ஹாஜா நஜுமுதீன் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம் முதல்வர் விஜய் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த நாகூர் தர்கா அறங்காவலர்கள் அரசாணையை பெற்றுக்கொண்டார்.
அரசியல் தலையீடு இல்லை!
நிருபர்களிடம் அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது: நாகூரில் நவம்பர் 10ம் தேதி முதல் நடைபெற இருக்கும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை விலையில்லாமல் வழங்குவதற்கான அரசாணையை முதல்வர் விஜயை சந்தித்து பெற்றோம்.
சந்தனக்கூடு விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஆய்வு கூட்டத்தை நாளை நடத்த வேண்டும் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். விழாவை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
சந்தனக் கட்டைகள் வழங்குவதில் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லை; நாகூர் தர்காவில் யானை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு ஷாஜகான் கூறினார்.
