நாங்களாம் அரசியலுக்கு வரக்கூடாதா? விஜய்யின் தலித் வாக்க…

சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்து இருந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு பேசியதில் இருந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தனுஷ் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே அவர் சொன்ன ஒரு வார்த்தை தான். அதாவது, தனது ரசிகர்களை மக்களுக்கு மக்கள் பணி செய்யுமாறு ரசிகர்களிடம் தெரிவித்து இருந்தார்.

மக்கள் பணி தானே செய்ய தெரிவித்து உள்ளார். இதில் என்ன இருக்கிறது என்று தோன்றினாலும், அரசியலில் எண்ட்ரி கொடுக்கப்போகிறாரா என்று மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு நடிகருக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது வழக்கமான ஒன்று தான். அந்த ரசிகர்களை மக்களுக்கு நற்பணி செய்ய வேண்டும் என்று தூண்டியவர் விஜய்யும் ஒருவர்.

அவரின் ஒரு ரசிகர் மன்றமும் ரசிகர்களின் பங்களிப்பு தான் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜயை உருவாக்கியுள்ளதோடு, பழம்பெரும் கட்சிகளையும் தோற்கடித்துள்ளது. அது ஒரு காரணமாகவே இருந்தாலும் விஜய் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் மற்றொரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யின் அரசியல் நுழையும் மாபெரும் வெற்றியும் அடுத்தடுத்த பல நடிகர்கள் அரசியலில் என்ட்ரி கொடுக்க தொடங்கி வருகின்றனர்.

அதேபோல், அரசியல் தலைவர்களும் புதுக்கட்சியை தொடங்கி வருகின்றனர். இதற்கு எல்லாம் முதன்மை காரணமே விஜய்யின் வெற்றி தமிழக அரசியலில் ஏற்படுத்திய தாக்கமே. இப்படி இருக்கையில் தான், நடிகர் தனுஷும் ரசிகர்களை மக்கள் பணி செய்ய தெரிவித்து இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அப்படியே நடிகர் தனுஷ் அரசியலில் நுழைந்தாலும், அவருக்கு விஜய் அளவிற்கு செல்வாக்கு இல்லை என்பதே  இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

இருப்பினும், அரசியலில் அவருக்கு எந்தளவிற்கு ஈடுபாடு இருக்கிறது என்று தனுஷே சொன்னால் மட்டுமே உண்மை வெளியில் வரும். ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸின் அரசியல் நுழைவு பரபரப்பாக பேசப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Source link