”நாட்டிற்குப் பெருமைகளைத் தேடித் தர வேண்டும்”; துளசிமதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (18-10-26) தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிகள் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள், போட்டிகளில் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று வருகின்றனர். இது தமிழக மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.  

அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன், இந்த போட்டித்தொடரில் பேட்மிண்டன் பிரிவில், ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டித் தொடரில் 3 பதக்கங்களை வென்ற இவரது திறமையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளது.   

இந்நிலையில், பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற துளசிமதி முருகேசனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், ”ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். மேலும், அவர் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உழைத்து விளையாட்டில் புதிய சிகரங்களைத் தொட வேண்டும். வரும் காலங்களில் உலக அரங்கில் மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் இந்திய நாட்டிற்கு அளப்பரிய பெருமைகளைத் தேடித் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.