அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ஒரு பங்கை இலவசமாக வழங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் (18 வயதிற்குட்பட்ட) தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கை வழங்க இருப்பதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு முதல், இந்த பங்கை அமெரிக்கக் குழந்தைகளுக்கு வழங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தின் ஒரு பங்கு என்பது 146 டாலர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் சுமார் 7.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில், இதன் மொத்த மதிப்பு சுமார் 10.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 99,700 கோடி) என்று கணக்கிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால் உருவாகும் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘யுனிவர்சல் ஹை இன்கம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை எலான் மஸ்க் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
