நாட்டு மக்களிடம் இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரை

புதுடெல்லி,

நாட்டு மக்களிடம் இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் என டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், பிரதமர் எதைப்பற்றி பேசப்போகிறார்? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்த நிலையில், இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார் என அறிவிப்பு வெளியாகியிருப்பதால், இன்று பிரதமரின் உரை மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி இன்று மந்திரிசபை கூட்டத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்காததன் மூலம் எதிர்க்கட்சிகள் தவறு செய்துவிட்டன என்றும், அதன் விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள் என்றும் கூறியதாகவும், “அவர்கள் நாட்டின் பெண்களைக் கைவிட்டுவிட்டனர். இந்தச் செய்தி ஒவ்வொரு தனி நபருக்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்,” என்று பிரதமர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Source link