தென்னிந்தியாவின் பிரபல நடியான மமிதா பைஜு, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவரது படங்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களாக அமைந்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’பெத்தலேகம் குடும்ப யூனிட்’ படம் மலையாள திரையுலகில் பெரும் சாதனை படைத்துள்ளது.
இப்படம், மக்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, வசூல் சாதனை செய்துள்ளது. அந்த வகையில், இப்படம் ரூ.300 கோடி வசூலித்தது மலையாள திரையுலகில் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட மமிதா பைஜு, உருக்கமாகப் பேசினார்.
அவர் பேசுகையில், முன்னதாக ’பிரேமலு’ மற்றும் ’சூப்பர் சரண்யா’ போன்ற படங்களில் நடித்திருந்தேன். அப்போது, ’சூப்பர் சரண்யா’ படம் முடிந்து, அது வெளியாவதற்கு முன்பே, பெத்தலேகம் படத்தின் கதையை இயக்குநர் கிரிஷ் ஏ.டி. என்னிடம் சொன்னார். மேலும், அதில் நீதான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
என்னால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று எனக்கே நம்பிக்கை இல்லாத ஆரம்பக் கால கட்டத்தில், அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். என்னைப்போன்ற சாதாரண பெண்ணுக்கு இது போன்று தொடர்ச்சியாகப் பெரிய வாய்ப்புகளைக் கொடுத்தார். அவருக்கு மிகப்பெரிய நன்றி.
மேலும், படத்தில் பணியாற்றிய நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” எனப் பேசினார். பிரேமலு, சூப்பர் சரண்யா மற்றும் பெத்த்லேகம் குடும்ப யூனிட் என அடுத்தடுத்து மூன்று படங்களில் மமிதா பைஜுவுக்கு கிரிஷ் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
