சென்னை: தலைமை செயலக கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதல்வரின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், பழையமான கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் அமைந்துள்ளது. இதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்கள், அந்த அறையில் அமர்ந்து தான் பணிகளை கவனித்தனர். முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாகவும் முதல்வர் அலுவலகம், முதல்வரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அறை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்து. நிர்வாகக் காரணங்களினாலும் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப்பிரிவு, முதல்வரின் சமூக 2 (CMO Social Media), செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இயக்குநர் அருள், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையைச் சார்ந்த பாஸ்கரன், இரவிச்சந்திரன், அ. வே. சுரேந்திரன் மற்றும் த. கலைச் செல்வன் ஆகிய அலுவலர்களின் அலுவலகம் மற்றும் எழுதுப்பொருட்கள் அறை அனைத்தும் உடனடியாக, தரைத்தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளம் ஆகியவற்றில் காலியாக உள்ள சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
