நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்: 10-வது தளத்தில் இருந்து மாற்றப்படும் பிரிவுகள் எவை?

தலைமைச் செயலகத்தில் நிலவும் இட நெருக்கடி காரணமாக, தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதுள்ள இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் அலுவலகம், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகள் அனைத்தும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளன.

OTT: வீக் எண்ட் கம்மிங்… ஜூலை இறுதியை அதிர வைக்கும் ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்

முதலமைச்சர் அலுவலகம் 10-வது தளத்திற்குச் செல்வதைத் தொடர்ந்து, 10-வது தளத்தில் தற்போதுள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் பல்வேறு பிரிவுகள், அதாவது வரவு செலவு பிரிவு, முதலமைச்சரின் சமூக ஊடகப்பிரிவு, தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு, செய்தித்துறை இயக்குநர் மற்றும் பிற அலுவலர்களின் அலுவலகங்கள் உடனடியாக சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன. 

அங்கு காலியாக உள்ள தரைத்தளம், 2-வது தளம் மற்றும் 3-வது தளம் ஆகிய இடங்களுக்கு இவை இடமாற்றம் செய்யப்படுகின்றன. அதே போல், 10-வது தளத்தில் இயங்கி வரும் சுற்றுலாத் துறையின் சில பிரிவுகள், அத்துறை அமைந்துள்ள 9-வது தளத்திற்கே மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் வணிக வரித்துறை, பத்திரப்பதிவுத் துறை ஆகியவற்றின் துணை மற்றும் இணைச் செயலாளர்களின் அறைகள், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 1, 5, 7 மற்றும் 8-வது தளங்களில் உள்ள கூட்ட அரங்குகள் மற்றும் உணவு அருந்தும் அறைகளுக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகின்றன. 

இந்த இடமாற்றப் பணிகளுக்காக நாமக்கல் கவிஞர் மாளிகையின் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளை உடனடியாக பொது  துறையிடம் ஒப்படைக்குமாறு துறை உயர் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அரசு தலைமைச் செயலாளர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Source link