‘நிஜமாவே கனமழை பெயதால், அங்கிள் கேக்காமலேயே லீவு தாரேன்’: இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பிய மாணவர்களுக்கு நெல்லை கலெக்டர் கேரண்டி

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியும், தாழ்வான பகுதிகளை நீர் சூழ்ந்தும் காணப்படுகிறது. 

இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், தொடர் மழை எச்சரிக்கையை முன்னிட்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, தேனி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பிய மாணவர்கள் 

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனிடம் இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், “நிஜமாவே கனமழை பெய்தால், நீங்க யாருமே கேக்காமலேயே லீவு வரும்; உங்க பாதுகாப்புக்கு இந்த கலெக்டர் அங்கிள் எப்பவும் கேரண்டி; மழை வந்தா நான் பாத்துக்கிறேன், இப்போதைக்கு புக்கப் பாத்து படிங்க” என்று அவர் பதில் அளித்துள்ளார். 

Source link