கிறிஸ்ட்சர்ச்: தலா 5 டி20, ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 ஆல் ரவுண்டர்களுடன் களமிறங்குகிறது. 1425 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 36 வயதான புவனேஸ்வர் குமார் மீதான இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால், நீண்ட இடைவேளைக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் களமிறங்க இருக்கிறார்.
பலம் பொருந்திய நியூசிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணில் சம பலம் கூடிய இந்திய அணி எதிர்த்து விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
