நமது நிருபர்
பாட்னாவில் நடந்த, நீட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட சம்பவத்தில், லாலு பிரசாத் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அனைந்திந்திய மாணவர் சங்கம் சார்பில் பீஹாரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது மாணவர்கள்- போலீசார் இடையே வெடித்த மோதல் கலவரமாக மாறியது. பாட்னாவில் நடந்த வன்முறையில் போலீஸ் வாகனத்தை போராட்டக்காரர்கள் கவிழ்த்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை குவிக்கப்பட்டது. இதற்கிடையே நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக இளைஞர்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
பிறகு போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு அமைதியான சூழல் திரும்பியது. தற்போது பாட்னாவில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களுக்கு ஆதரவளித்த லாலு பிரசாத் மூத்த மகன் ஜன சக்தி ஜனதா தளம் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தேஜ் பிரதாப் யாதவை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தேஜ் பிரதாப் யாதவ் பியூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் அடுத்த 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் இருப்பார்.
