நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய திங்கள்கிழமையன்று இளைஞர்கள் திரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இதில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலில் இளைஞர்கள் பலர் காயமடைந்தபோதிலும், ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் டெல்லியில் போராட்டத்தில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் (CRPF) வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed… pic.twitter.com/AHKUWaANjN
— M.K.Stalin (@mkstalin) July 22, 2026
இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மற்ற மாநிலங்களைப் பற்றி என்னால் பேச முடியாவிட்டாலும், தமிழ்நாட்டைப் பற்றி உறுதியாகப் பேச முடியும். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வைத் தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை தீவிரமாக எதிர்க்கின்றன. நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ந்து மசோதாக்களும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நியாயப்படுத்த முடியாத ஒன்றை மத்திய அரசு நியாயப்படுத்துவதை நிறுத்திக் கொண்டு, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். மேலும், நாளை வெளியாகவுள்ள ‘தி இந்து’ நாளிதழில் எழுதியுள்ள கருத்துக்கட்டுரையில், நீட் தேர்வு ஏன் அடிப்படையில் நியாயமற்றது மற்றும் அது ஏன் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
