“நீட் தேர்வை ரத்து செய்க” – ரயில் நிலையத்தில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிப்பு!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்  ஒரு பகுதியாக அக்கட்சியினர் நேற்று முன்தினம் (20.07.2026) நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினரும் துணை ராணுவப்படையினரும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாக தாக்கினர். 

இதனால், இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதாவது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அடையாளம் தெரியாத நபர்கள் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை அழித்துள்ளனர். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வேண்டும். பாண்டியன், அந்தியோதயா, பொதிகை ரயில்களை சோழ வந்தானில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வாசகங்களும் அங்கு எழுதப்பட்டுள்ளன. நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வி நடைமுறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளவும் கோரி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source link