இப்படி பலரும் மாணவர் அமைப்புகள், மருத்துவ மாணவர் சங்கங்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் நீட் தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தொவினோ தாமஸ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கையை கண்டித்தும் ஆர். மாதவன் தேர்வுக் கேள்வித்தாள் கசிவு மாணவர்களின் கனவுகளை பாதிக்கிறது என்றும், வெளிப்படையான மற்றும் நியாயமான தேர்வு முறை அவசியம் என்றும் பதிவிட்டார்.
இந்தியிலும் நடிகை ஷபானா ஆஸ்மி , இம்ரான் கான் ஆகியோர் டெல்லி மாணவர் போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று ஆதரவு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் நடிகர் நசீருதீன் ஷா போன்ற பலரும் வெளிப்படையாக நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
தொடர்ந்து இன்றும் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
குழந்தை அழும்போதே கவனிக்காமல் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதற்கு பதில், தடியடி கிடைத்தால் நாடு தோற்றதாகவே அர்த்தம். குழந்தை அழும்போதே கவனிக்காமல், நம் குழந்தைகள் பலர் இறக்கும் வரை காத்திருந்துவிட்டோம்; குழந்தைகள் தங்கள் கடமையைச் செய்துவிட்டார்கள்; அவர்களுக்கான கடமையை செய்வது நாட்டின் பொறுப்பு
சோனம் வாங்சுக், நீங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகிறீர்கள். எனவே, இந்தியாவின் மாணவர்களுக்காக உங்களுடைய உண்ணாவிரதத்தை நீங்கள் முடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு மிகவும் சிறப்பானவர். உங்களது வேலையை நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். நாடு உங்களுக்குத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. எங்களுடைய தோல்விகளை விட உங்களுடைய கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
