நீதிமன்றத்தில் ஆடிட்டர் சொன்ன ஒரு வார்த்தை.. பழனி கோவில் நில விவகாரம் – மாட்டிக்கொண்ட முக்கிய புள்ளி! – palani dhandayuthapani temple land case auditor statement madurai high court

பழனி கோவில் நிலம் முறைகேடு விவகாரம் தமிழ்நாட்டில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நிலத்தை வாங்கிய நபர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் மடத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பழனி கோவிலுக்காக பக்தர் ஒருவர் 1888 ஆம் ஆண்டு மடத்தின் பெயரில் தானமாக கொடுத்த நிலம், தனியார் சிலரால் அபகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1999 ஆம் ஆண்டு முதல் மடத்தில் நிர்வாகத்தில் உரிமை கொண்டாடும் சிலர் இந்த நிலத்தை வெளி ஆட்களுக்கு விற்க முயற்சி செய்துள்ளனர்.

பழனி கோவில் நிலம் முறைகேடு

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் ஜூலை 6ஆம் தேதி இந்த நிலம் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று கூறி, 1000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சுமார் 2 கோடி வெள்ளதுரை என்பவர் சேதுபதிக்கு விற்பனை செய்துள்ளார். இதற்காக பத்திரம் பதிவான போது தான் இந்த பிரச்சனை வெளியில் வர ஆரம்பித்தது.

சத்தமில்லாமல் சம்பவம் செய்யும் தவெக….கோட்டை விடும் அதிமுக?

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ததுடன் பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டது.அதன் பெயரில் சிபிசிஐடி போலீஸ் ஆர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி பத்திரப்பதிவு கூடுதல் அழிந்து ஒருவர் தலைமையில் தனி குழு அமைத்து விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் 1.40 ஏக்கர் நிலம் தற்போது பழனி முருகன் கோவிலில் வாகன நிறுத்துமிடமாக இருந்து வருகிறது.

சிபிசிஐடி விசாரணை

இந்த மோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ் மற்றும் அதை வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.இந்த வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கிவிட்டது. இந்நிலையில், முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வெள்ளத்துரை, தனக்கும் முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:சமீபத்தில் ஒரு சொத்தை விற்றதில் எனக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அந்தப் பணத்தை வங்கியில் போட்டால் அதிக வரி கட்ட வேண்டி வரும் என்பதால், வேறு ஏதாவது சொத்தில் முதலீடு செய்யுமாறு என் ஆடிட்டர் யோசனை கூறினார். அதன்படியே பழனி மலை அடிவாரத்தில் உள்ள நிலத்தை வாங்க முடிவு செய்தேன்.

வெள்ளத்துரை முன்ஜாமீன் மனு

நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்த்தபோது, வழக்குகள் எல்லாம் முடிந்து விற்பனைக்குத் தயாராக இருப்பது தெரிந்தது. ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்கள் போலி எனக் கூறிப் பதிவு செய்ய மறுத்ததால், நான் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்றுதான் அந்த நிலத்தைப் பதிவு செய்தேன்.இதைத் தவிர இந்த விவகாரத்தில் எனக்கு வேறு எந்தத் தொடர்பும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக என்னை இதில் தேவையில்லாமல் சிக்க வைத்திருக்கிறார்கள்.

என் தரப்பு விளக்கத்தைக் கேட்காமலேயே பத்திரப்பதிவையும் ரத்து செய்துவிட்டார்கள். நான் உழைத்துச் சேர்த்த பணத்தில் தான் இந்த நிலத்தை வாங்கினேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, வழக்கில் சிபிசிஐடி காவல்துறையையும் ஒரு தரப்பாகச் சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

Source link