தமிழகத்தின் நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட வேண்டிய நதிநீர் இணைப்புப் பணிகள் மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக நீர் மேலாண்மை மற்றும் முன்னுரிமை அளிக்க வேண்டிய நீர் திட்டங்கள் தொடர்பாக சில முக்கியக் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அரசுக்குத் தெரிவித்திருந்தார். அந்தப் பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் நீர் ஆதாரங்களைப் பெருக்குவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த ஆய்வுக்கூட்டம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. எனவே பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, நீர்வளத்துறை சார்ந்த இந்த கூட்டம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
