-நமது நிருபர்-
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நிஷாத் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
ஜப்பானின் அய்ச்சி- நாகோயாவில் இன்று நடந்த ஆண்களுக்கான டி-47 பிரிவு நீளம் தாண்டுதல் போட்டியில், நிஷாத் குமார் 7.11 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். மூன்றாவது மற்றும் ஐந்தாவது முயற்சிகளில் அவர் இந்த தூரத்தை எட்டினார்.
கடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற இவர், தற்போது நீளம் தாண்டுதலில் பங்கேற்ற முதல் போட்டியிலேயே தங்கம் வென்று அசத்தியுள்ளார். தற்போது வரை இந்தியாவுக்கு 2 தங்கம் கிடைத்துள்ளது.
