நெட்பி​ளிக்​ஸில் வெளி​யாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’

‘பி​யார் பிரேமா காதல்’, ‘ஸ்​டார்’ ஆகிய படங்​களை இயக்​கிய இளன், தற்​போது ‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ என்ற படத்​தின் மூலம் நாயக​னாக அறி​முக​மாகிறார். இந்​தப் படத்தை அவரே எழுதி, இயக்​கி​யுள்​ளார்.

சான்வீ மேக்னா நாயகி​யாக நடித்​துள்ள இப்​படத்​தில் ராதிகா சரத்கு​மார், யோகி பாபு, எம்​.எஸ்​.​பாஸ்​கர், கீதா கைலாசம், இளங்கோ குமர​வேல், செந்​தில், மாறன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். யுவன் சங்​கர் ராஜா இசை அமைத்​துள்​ளார். ‘மேட் இன் கொரி​யா’​வைத் தயாரித்த ‘ரைஸ் ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட்’ ஸ்ரீநிதி சாகர் தயாரித்​துள்​ளார். இப்படம் ஆக.21-ல் நெட்பி​ளிக்ஸ் ஓடிடி தளத்​தில் ரிலீஸ் ஆகிறது.

“திரு​மணத்​துக்​குப் பிறகும் பெற்​றோர் வீட்டை விட்​டுச் செல்ல மறுக்​கிறார் நாயகி சான்​வீ. அதனால், அவரது கணவ​ரான இளன், மனைவி வீட்​டுக்கே குடி பெயர்​கிறார். இதன் பின்​னர் தொடங்​கும் குடும்ப கலாட்​டா, கலாச்​சார மோதல்​கள், உறவு சிக்​கல்​கள் மற்றும் உணர்​வுப்​பூர்​வ​மான தருணங்​கள்​தான் இந்​தப் படம்.

சிரிப்​பும், சிந்​தனை​யும் கலந்த பயண​மாகப் படம் நகரும். இறுதியில், “சந்​தோஷ​மாக வாழ்​வதற்​கான விதி​களை மற்றவர்கள் தீர்​மானிக்க வேண்​டிய​தில்​லை” என்​ப​தைப் படம் சொல்​லும்” என்​றது படக்​குழு.

Source link