நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெருவெள்ளத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களின் முதல்நிலை உறவினர்களுக்கு இலவச DNA பரிசோதனை செய்யத் தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் 26, 2026 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கினர். அவர்களை விரைந்து மீட்கத் தமிழ்நாடு அரசு, மத்திய அரசு மற்றும் நேபாள அரசுடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. செப்டம்பர் 2, 2026 நிலவரப்படி, வெள்ளத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 305 பேரில் 220 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 நபர்களைத் தொடர்புகொள்ளும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இலவச DNA பரிசோதனை
காணாமல் போனவர்களை அடையாளம் காணும் நோக்கில், நேபாள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி முதல்நிலை உறவினர்கள் (தாய், தந்தை, மகன் அல்லது மகள்) விருப்பத்தின் பேரில் இலவச DNA (இரத்த மாதிரி) பரிசோதனை செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மண்டல தடய அறிவியல் ஆய்வகங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்பரிசோதனை விவரங்களை நேபாள அரசின் இணையதளத்தில் பதிவேற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நேபாளம் செல்ல விரும்பும் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைத் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய ஆய்வகங்கள் மற்றும் அதிகாரிகள்
சென்னை மண்டலம்: திரு. காஜா மொய்தீன், இயக்குநர், தடய அறிவியல் துறை, 30A, காமராஜர் சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004. (கைபேசி: 9941464808) மதுரை மண்டலம்: திரு. விஜயேந்திரன், துணை இயக்குநர், மண்டல தடய அறிவியல் ஆய்வகம், கலெக்டர் சாலை, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகம், மதுரை – 625 020. (கைபேசி: 8637674451) தஞ்சாவூர் மண்டலம்: திரு. ராஜ்மோகன், துணை இயக்குநர், மண்டல தடய அறிவியல் ஆய்வகம், பிள்ளையார்பட்டி, வல்லம் மெயின் ரோடு, தஞ்சாவூர் – 613403. (கைபேசி: 9791112894)
24 மணி நேர அவசர உதவி எண்கள்:
கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிகளுக்குப் பொதுமக்கள் கீழ்க்கண்ட கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொள்ளலாம்: அயலகத் தமிழர் நலத்துறை (சென்னை): 18003093793, 8069009901, 8069009900 (24×7 எண்கள்) தமிழ்நாடு இல்லம் (புதுதில்லி): 9289516712 (WhatsApp / Call), 9868530776 (Mobile)
Source link
